தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து! • சாதிவாரிக் கணக்கெடுப்பில் தொட்டிய நாயக்கர் என்றே பதிவு செய்க! – திருப்பூர் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் • பக்கிங்ஹாம் கால்வாயின் வீழ்ச்சி – வாழ்வாதார நீர்வழி எப்படிப் புறக்கணிக்கப்பட்டது? • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #08 – சிறிய விதை... பெரிய மரம்! பொறுமையின் பலன்! • வேட்டையில் நிகழ்ந்த தவறு – பாண்டுவுக்கு வந்த சாபம்! • ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து! • சாதிவாரிக் கணக்கெடுப்பில் தொட்டிய நாயக்கர் என்றே பதிவு செய்க! – திருப்பூர் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் • பக்கிங்ஹாம் கால்வாயின் வீழ்ச்சி – வாழ்வாதார நீர்வழி எப்படிப் புறக்கணிக்கப்பட்டது? • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #08 – சிறிய விதை... பெரிய மரம்! பொறுமையின் பலன்! • வேட்டையில் நிகழ்ந்த தவறு – பாண்டுவுக்கு வந்த சாபம்!
விளம்பரங்கள்
ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து!

ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து!

Admin 19 Nov 2026 | 06:02 PM
பகிர்:

ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து!

ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளரும், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளருமான திரு. P. தேவேந்திரன் குடும்ப திருமண வரவேற்பு விழாவில், சங்கத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. N. பவுல்ராஜ் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சத்தியமங்கலம் கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் நேற்று (18.11.2026) மாலை நடைபெற்ற இவ்விழாவில், திரு. P. தேவேந்திரனின் சகோதரரும், தொழில் பங்குதாரருமான திரு. P. ஆனந்தன் – திருமதி A. வனஜா தம்பதியினரின் அன்பு மகன் A. கார்த்திகேயன், B.Tech., MBA அவர்களுக்கும், ஈரோடு மாவட்டம், அ.இ.அ.தி.மு.க. சத்தியமங்கலம் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறைத் தலைவர் திரு. P. சஞ்சீவ்குமார் – திருமதி S. சத்தியவாணி தம்பதியினரின் அன்பு மகள் S. விசாலாட்சி, B.E. அவர்களுக்கும் திருமண வரவேற்பு நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான திரு. N. பவுல்ராஜ் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமுதாய நலப்பணிகளில் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. P. தேவேந்திரன் குடும்பத்தினரின் இல்ல விழாவில் சங்கத்தின் பிரதிநிதி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மணமக்கள் இருவரும் அன்பும், அறமும் நிறைந்த இல்லற வாழ்வில் இணைந்து, வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு சிறப்புடன் வாழ்ந்திட வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு சமுதாய செய்திகள் திருமண வரவேற்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சமுதாய நலச்சங்கம் இராஜகம்பளத்தார் மணமக்கள் வாழ்த்து
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண