சுகப்பிரியா குழுமத் தலைவர் திரு. எஸ். இராமராசு இல்லத் திருமண விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளரும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தைச் சேர்ந்த சுகப்பிரியா குழுமத்தின் தலைவருமான திரு. எஸ். இராமராசு அவர்களின் இல்லத் திருமண விழா நேற்று (01.11.2026), ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இத்திருமண விழாவில் இராஜகம்பள சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சங்க நிர்வாகிகள், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் அறிமுகம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், புகழ்பெற்ற சுகப்பிரியா குழுமத்தின் தலைவருமான திரு. எஸ். இராமராசு – திருமதி ஆர். ருக்மணிதேவி தம்பதியினரின் அன்பு மகனும், சுகப்பிரியா குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான திரு. ஆர். சத்தியநாராயணன், B.Com., LL.B., அவர்களுக்கும், விருதுநகர் மாவட்டம், முத்துராமன்பட்டியைச் சேர்ந்தவரும், தூத்துக்குடி மாநகராட்சியில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருபவருமான திரு. ஆர். பாண்டி – திருமதி பி. பாண்டி தம்பதியினரின் அன்பு மகளான செல்வி பி. மகேஷ்வரி, B.Tech., அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.இராஜகம்பள சமுதாயக் குலவழக்கப்படி திருமணச் சடங்குகள்!
இராஜகம்பள சமுதாயத்தின் பாரம்பரியக் குலவழக்கப்படி நடைபெற்ற இத்திருமணத்தில், முதலில் சமுதாயப் பெரியோர்களும் பெண்களும் சாலிப்பாடல்களைப் பாடி திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தினர்.
தொடர்ந்து, சுகப்பிரியா குழுமக் குடும்ப குரு மணமக்களுக்கு மாலை அணிவித்து நல்லாசி வழங்கினார். அவரது ஆசியுடன் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு திருமண உறவில் இணைந்தனர்.
திருமண வரவேற்பு – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
திருமணத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழமை (31.10.2026) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி ஆகிய இரண்டிலும் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இராஜகம்பள சமுதாயப் பெருமக்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு!
சுகப்பிரியா குழுமத் திருமண விழாவில் அதிமுக மூத்த தலைவர் கே. கலாநிதி, அதிமுக ஒன்றியச் செயலாளர் கே. கண்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு. பழனிச்சாமி, அமைப்புச் செயலாளர் மு. சரவணன், மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் எஸ். இராமராஜு, ஒருங்கிணைப்பாளர் டி. சுப்பிரமணியன், மண்டலப் பொறுப்பாளர் ஆர். ஆறுமுகச்சாமி, ஆலோசகர்கள் ஆடிட்டர் நாராயணன், கந்தசுப்புராஜ், வழக்கறிஞர் துரைசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
சங்கத்தின் நன்கொடையாளர்களான மேனாள் முதல்வர் பாண்டிகுருசாமி, ரெட்டியார்சத்திரம் அன்பரசு, திருவாசகமணி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சிங்கராஜ் ராஜகம்பளம், திருப்பூர் இராஜகோபால், எரிச்சனத்தம் சங்கையா உள்ளிட்ட ஏராளமான சமுதாயப் பிரமுகர்களும் விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளையும், வாழ்வியல் நல்லாசிகளையும் தெரிவித்தனர்.
சமுதாயத்தின் பாரம்பரியத் திருமணச் சடங்குகளுடன், உறவினர்கள், நண்பர்கள், சமுதாயப் பெரியோர்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் அன்பும் வாழ்த்துகளும் சங்கமித்த இவ்விழா, சிறப்பானதொரு குடும்ப நிகழ்வாக அமைந்தது.
மணவாழ்வில் இணைந்துள்ள மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று, அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய இல்லற வாழ்வை வாழ்ந்திட தொட்டிய நாயக்கர்.காம் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.