தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர் இணையதளத்தில் கூகுள் விளம்பரம்!

தொட்டிய நாயக்கர் இணையதளத்தில் கூகுள் விளம்பரம்!

Radheyan 21 Jun 2021 | 11:41 PM
பகிர்:

கடந்த ஒன்றரை வருடங்களாக தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்ந்த செய்திகளையும், நிகழ்வுகளையும் மட்டுமே தொடர்ந்து வெளியிட்டு, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் பிரத்யோக செய்தி ஊடகமாக வெளிவரும் www.thottianaicker.com இணையதளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது.

இதனால் பிரதான அரசியல் கட்சிகள், உளவுத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள், சமூக ஊடகங்கள், மற்றும் பிற சமுதாய அமைப்புகளின் கவனத்தை பெற்று வெற்றிநடைபோடுகிறது.

இதற்கு சிகரம் வைத்தாற்போல் www.thottianaicker.com இணையதளத்தை  கூகுள் நிறுவனம் அங்கீரம் செய்து, அதன் விளம்பரங்களை நமது இணையத்தில் வெளியிட இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நமது www.thottianaicker.com இணையதளத்தில் இனி கூகுள் நிறுவன விளம்பரங்கள் இடம்பெறுகிறது. 

இதுதவிர, நமது சமுதாயத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள் தங்களது விளம்பரங்களை வெளியிட்டு சந்தைவாய்ப்பை பெருக்கிக்கொள்வதற்கு உதவும் பொருட்டு சிறப்புப்பகுதி இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர நமது சமுதாய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய சேவகர்களின் அன்றாட மக்கள்சேவையை தொடர்ந்து வெளியிட்டு, அவர்களை அரசியல் வட்டாரத்தில் பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு அரசியல் மற்றும் தொழில்துறையில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கு பயன்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உறவுகள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான பொருட்களின் ஆன்லைன் வர்த்தக தேடலை www.thottianaicker.com இணையதளத்தில் மேற்கொண்டு பயன்பெற்று, தங்கள் நல் ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண