தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
கட்டளையையேற்று சுற்றிச்சுழலும் கழகக்கண்மணி திரு.செல்வராஜ்!

கட்டளையையேற்று சுற்றிச்சுழலும் கழகக்கண்மணி திரு.செல்வராஜ்!

Radheyan 04 Jun 2021 | 04:37 PM
பகிர்:

தளபதியாரின் கண்ணசைவுக்கு கட்டுப்படுவராக,  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், கழக மகளிரணி செயலாளர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுபவராக,  மாவட்டக்கழக செயலாளரும், சமூகநலத்துறை அமைச்சருமான மாண்புமிகு. கீதா ஜீவன் அவர்களின் போர்ப்படை தளபதிகளில் ஒருவராக,   சட்டமன்ற உறுப்பினர். திரு.மார்க்கண்டேயன் ஆலோசனைகளை களத்திலே செயல்படுத்தும் செயல்வீரராக, கழகப்பணியிலே அல்லும் பகலும் அயராமல் பாடுபட்டு, கழக முன்னனி தலைவர்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் "கொள்கை வேலம்" புதூர் கிழக்கு ஒன்றியக்கழக  செயலாளர் திரு.செல்வராஜ்.


கொரோனா பெருந்தொற்றால் அல்லல்படும், வாழ்வாதரங்களை இழந்து அவதியுறும் ஏழை எளிய மக்களின் பசி போக்கிட கலைஞரின் 98-வது பிறந்தநாளில் செயலாற்றிட வேண்டும் என்று தமிழக முதல்வரின் உத்தரவை களத்தில் நிகழ்த்திட கடுமையாக பணியாற்றி, கழகக்கொடியினை கிளைக்கழகம் தோறும் ஏற்றச்செய்து, பொதுமக்களுக்கு உணவு, உதவிப்பொருட்கள் வழங்கி அன்புத்தலைவரின் பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார். 

புதூர் கிழக்கு ஒன்றியம், சல்லிசெட்டிபட்டி பகுதியில் கலந்துகொண்ட திரு.செல்வராஜ் அவர்கள், அவைத்தலைவர் சக்கரை செட்டியார் முன்னிலையில், கழக நிர்வாகிகள் புடைசூழ, கிளைக்கழகத்தின் சார்பில் 150 நபர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினார். மேலும் சில பகுதிகளில் பிறந்தநாள் நினைவாக மரக்கன்று நட்டு சிறப்பித்தனர்.

சமீபத்தில் நிகழ்ந்த வாகனவிபத்தில் காலில் எழும்புமுறிவு ஏற்பட்டநிலையிலும், அதைப்பொருட்படுத்தாமல் தேர்தல் பணியிலும், இயக்கப்பணியிலும் தீவிரமாக செயல்பட்ட திரு.செல்வராஜ் அவர்கள், தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கம்பளத்தார்களின் இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டதை சாமானிய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் துண்டுபிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்து, அவரது ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற உதவிகரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dmkselvaraj Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண