Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
இசைமாமேதை நல்லப்பசுவாமிகள் 132-வது ஜெயந்தி - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.

இசைமாமேதை நல்லப்பசுவாமிகள் 132-வது ஜெயந்தி - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.

Senthilkumar 24 Sep 2020 | 08:20 PM
பகிர்:

இன்று (24.09.2020) காலை விளாத்திகுளம் ஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 132-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு சுவாமிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும், வீரபாண்டிய கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுதாரர் திரு.வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, சமூக ஆர்வலர் திரு.உமாபதி, ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் த.வீ.க.பண்பாட்டுக் கழக மாவட்ட தலைவர் தொழிலதிபர்.திரு.கண்ணன் அவர்கள் தலைமையில், எழுத்தாளர் திரு.சிவக்குமார், நல்லப்பசாமிகளின் குடும்ப உறுப்பினர்கள் திரு.கண்ணன், திரு.மாரிச்சாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் ஊர் பொதுமக்கள், இசைப் பிரியர்கள் என நூற்றுக்குமேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு  சுவாமிகளின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 வந்திருந்த அனைவருக்கும் நல்லப்பசுவாமிகளின் குடும்பத்தைச்சேர்ந்த திரு.மாரிச்சாமி அவர்கள் சக்கரை பொங்கல் வழங்கினார்.


தகவல் உதவி: திரு.மாரிச்சாமி.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Nallappaswamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண