தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி

35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி

Admin 19 Jul 2026 | 01:41 PM
பகிர்:

சேலம்–நாமக்கல் சாலையில் அமைந்துள்ள தங்கமஹால் திருமண மண்டபத்தில் இன்று (19.07.2026) மாலை புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது ஆண்டு பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்கவுள்ளது. அதன் தலைவராக பிரபல தொழிலதிபர் திரு. ஆர். முத்துச்சாமி பதவியேற்கிறார். அவருடன் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

35 ஆண்டுகளுக்கும் மேலான அரிமா சங்கப் பணி!

நாமக்கல் மாவட்டம் கண்ணூர்பட்டி–தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆர். முத்துச்சாமி, நாமக்கல், புதுச்சத்திரம், புதன்சந்தை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீ பாலாஜி மெடிக்கல்ஸ் மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் மூலம் மொத்த மருந்து வினியோகத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

1989 ஆம் ஆண்டு புதன்சந்தை அரிமா சங்கத்தில் உறுப்பினராக இணைந்த அவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையின் சமூகப் பணிகளிலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.

சமூகப் பணிக்கான அங்கீகாரம்!

சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர்களில் ஒருவரான திரு. ஆர். முத்துச்சாமி, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் விருது வழங்கும் விழாவில் "முன்னத்தி ஏர் – வழிகாட்டும் தலைமுறை விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு!

2022 ஆம் ஆண்டு புதுச்சத்திரம் அரிமா சங்கம் உருவாக்கப்பட்டபோது அதன் வளர்ச்சிக்கும் அமைப்புக்கும் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக திரு. ஆர். முத்துச்சாமி திகழ்ந்தார். தற்போது, சங்கம் தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக அதன் தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இன்று மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அவருடன் புதிய நிர்வாகக் குழுவினரும் பதவியேற்று, அடுத்த ஒரு ஆண்டிற்கான சமூகப் பணிகளை முன்னெடுக்க உள்ளனர்.

பல்வேறு தரப்பினரின் வாழ்த்து!

புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. ஆர். முத்துச்சாமிக்கு பல்வேறு சமூக மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ். இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் மு. பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Lion R.Muthusamy thottianaicker www.thottianaicer.com Puduchatram Loins Club
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண