தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் பொன்.காசிராம்!

வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் பொன்.காசிராம்!

Radheyan 04 Apr 2026 | 11:39 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்.காசிராம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதுபற்றிய விவரம் வருமாறு,

தமிழக சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 23 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்கிடையே மார்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5 ஆம் தேதிகள் விடுமுறை தினங்கள் என்பதால்  4 தினங்கள் மட்டுமே வேட்புமனுக்கள் அளிக்க இயலும். தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மார்ச் 30 ஆம் தேதியே வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்ட நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒருநாள் (ஏப்'07) மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே இன்று (04.04.2026) சனிக்கிழமை என்றபோதும் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


இதற்கிடையே, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இராஜகம்பளத்தார்க்கு வாய்ப்பளித்த ஒரே அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பொன்.காசிராம் இன்று காலை விளாத்திக்குளம் வட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் புடைசூழ வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் பொன்.காசிராம், இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் சென்ற பொன்.காசிராம் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனு அளித்தார்.  இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பொன்.காசிராம் க்கு அக்கட்சியினரும், பொதுமக்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அனைவரும் தலைமைக் கழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்தனர்.  மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்.காசிராமை தவெகவினர் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் புடைசூழ  விளாத்திக்குளம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 


இதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். ஆதரவு கேட்டு வந்த பொன்.காசிராம்க்கு கிடைத்த் சிறப்பான வரவேற்பால் தவெக வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு கோர இருப்பதாக காசிராம் தெரிவித்துள்ளார். விளாத்திக்குளத்தில் இந்த முறை "விசில்" பறக்கும் என நம்பிக்கையோடு களம் காண்கின்றனர் தேர்தலை முதன்முதலாக எதிர்கொள்ளும் தவெகவினர். ந்பொன்.காசிராம் வெற்றிக்கனையைப் பறிக்க விளாத்திக்குளம் தொகுதி மக்கள் ஆதரவளிக்குமாறு சமுதாயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு TVK Pon.kasiram thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண