தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா?
விளம்பரங்கள்
ஒன்றிய அரசு வழக்குரைஞராக வை.பெ.தனபால் நியமனம்!

ஒன்றிய அரசு வழக்குரைஞராக வை.பெ.தனபால் நியமனம்!

Radheyan 07 Apr 2025 | 06:45 PM
பகிர்:

விருதுநகர் மாவட்ட நீதிமன்ற ஒன்றிய அரசு வழக்கறிஞராக பி.தனபால் அவர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இதன் விவரம் வருமாறு,

இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் வையப்ப நாயக்கர் அவர்களின் பெயரனும், மேலமுடிமன்னார்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினருமான வை. பெருமாள் நாயக்கர் அவர்களின் மகனுமான வை.பெ.தனபால் M.A., B.L., அவர்கள் விருதுநகர் மாவட்ட ஒன்றிய அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில். விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராவதற்காக தனபால் அவர்களை அரசு வழக்கறிஞராகவும் கே.சாந்தகுமார் உள்ளிட்ட ஐவரை கூடுதல் வழக்கறிஞராகவும் நியமனம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தென்னக இரயில்வே சம்மந்தப்பட்ட வழக்குகளில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் ஆஜராவதற்காக தனபால் அவர்கள் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொறுப்பில் மூன்றாண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும்வரை தனபால் இப்பணியில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு V.P.Dhanabal thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண