Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
மருத்துவச்செம்மல் விருது வென்ற பொம்முசாமிக்கு வாழ்த்துகள்!

மருத்துவச்செம்மல் விருது வென்ற பொம்முசாமிக்கு வாழ்த்துகள்!

Radheyan 31 Dec 2024 | 04:55 PM
பகிர்:

மருத்துவச்செம்மல் விருது வென்ற பொம்முசாமிக்கு வாழ்த்துகள்!

திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பொம்முசாமி அவர்களுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான வசந்த் டிவி மருத்துவச்செம்மல் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருத்துவர் பொம்முசாமியை பாராட்டினர். இதன் விவரம் வருமாறு,

திருப்பூர் மாநகரில் மருத்துவச்சேவைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் அவசர மருத்துவப்பிரிவுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமையப்பெற்றுள்ள இம்மருத்துவமனை, குறைந்த செலவில் நுரையீரல், சுவாசக்கோளாரு மற்றும் இருதய நோய்களுக்கும்  சிகிச்சை வழங்கி வருகிறது. மேலும், கிராமப்புற எளிய மக்களுக்கு தரமான உயர் சிகிச்சை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இம்மருத்துவமனை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்களைத்தேடி மருத்துவத்தைக் கொண்டுசேர்ப்பதில் முன்னோடி மருத்துவராக் இருந்துவரும் பொம்முசாமி அவர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனது திருப்பூர் செஸ்ட் மருத்துவமனை சார்பில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். இதற்காக மருத்துவர் பொம்முசாமிக்கு தமிழக சுகாதரத்துறை அமைச்சர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியான வசந்த் டிவி மருத்துவர் பொம்முசாமிக்கு மருத்துவச்செம்மல் விருது வழங்கியுள்ளது. கடந்த வாரம் திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை மன்னன் மதுரை முத்து மருத்துவர் பொம்முசாமிக்கு  பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் திருப்பூர் மாநகர துணைமேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், விகாஸ் வித்யாலயா கல்விக்குழுமத் தலைவர் ஆண்டவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மருத்துவர் பொம்முசாமியை வாழ்த்திப்பேசினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dr.Bommusamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண