Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
பெண்களுக்கு ரூ.50000 மானியம் வழங்க தமிழக அரசு புதிய திட்டம்!

பெண்களுக்கு ரூ.50000 மானியம் வழங்க தமிழக அரசு புதிய திட்டம்!

Radheyan 05 Oct 2024 | 04:05 PM
பகிர்:

உலக நாடுகள் பலவற்றிலும் பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம் என்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த தொழில்களை வட்டியில்லா எளிய தவணை முறையில் செலுத்தும் வகையில் தமிழக அரசு உதவி வருகிறது. இந்நிலையில், தற்போது மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு புதியதொரு திட்டத்தின் கீழ் ரூ 50 ஆயிரம் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. 

மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம், தாலிக்கு தங்கம் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பெண்கள் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ரூ 50 ஆயிரம் மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் கடந்த 2022 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் சமூக நலத்துறை சார்பில் தமிழக சட்டப்பேரவையில்  பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கியமாக 200 பயனாளிகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவை கடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மானியத்தை பெற 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த மானியத்தை பெற ஒருமுறை மட்டுமே தகுதியுடையவர் ஆவார். கைம்பெண்கள், நலிவுற்றவர், ஆதரவற்றவர் உள்ளிட்டோருக்கு மட்டுமே கிடைக்கும். இந்த மானியத்தை பெற பிறப்பு சான்று, வருவாய் சான்று , குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று உள்ளிட்டவை தேவைப்படும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண