Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குக - இராஜகம்பளத்தார்க்கு பாதிப்பு - பிரதமருக்கு கோரிக்கை.

முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குக - இராஜகம்பளத்தார்க்கு பாதிப்பு - பிரதமருக்கு கோரிக்கை.

பகிர்:

மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில்,  50 சதவீதமான இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு, அதை நிரப்பும்பொழுது ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 27 சதவீத இடங்களை முறையாக வழங்காததால் ,கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 10000 க்கும் மேற்பட்ட பிறபடுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை பல்வேறு நாளேடுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் வசிக்கும் இராஜகம்பள சமுதாய மக்கள் ஏற்கனே "நீட்" தேர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பில் இடஒதுக்கீடு முறை சரிவர பின்பற்றப்படாத காரணத்தால் இராஜகம்பள சமுதாயத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவர்களும், தங்கள் மேற்படிப்பை தொடரமுடியாமல் போகும் நிலையைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு முறையைத் தொடர வலியுறுத்தி  மாண்புமிகு பாரத பிரதமருக்கு வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Provide Reservation for OBC -Appeal to PM
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண