தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவில் கனிமொழி கருணாநிதி!

கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவில் கனிமொழி கருணாநிதி!

Radheyan 03 Jan 2024 | 10:33 PM
பகிர்:

இந்திய சுதந்திரப்போராட்ட தியாகி பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் இன்று (03.01.2024) விழா நாடெங்கும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தூத்துகுடி மாவட்டம் வைப்பாரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் விவரம் வருமாறு,  

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தென்மாவட்ட பெருவெள்ளத்திற்குப்பிறகு தூத்துக்குடி மாவட்டத்திலேயே முகாமிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளையொட்டி வைப்பார் சென்ற கனிமொழி அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் மாவீரன் கட்டபொம்மனாரின் வீரத்தைப் பற்றி எழுச்சியுரையாற்றினார். முன்னதாக வைப்பார் வருகைதந்த கனிமொழி அவர்களுக்கு இராஜகம்பளத்தார் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு மார்கண்டேயன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் மற்றும் திரளான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kattabomman 265-th Birthday thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண