தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
தாம்பரம் மாநகர துணை அமைப்பாளராக இளங்கோவன் நியமனம் - தலைவர்கள் வாழ்த்து!

தாம்பரம் மாநகர துணை அமைப்பாளராக இளங்கோவன் நியமனம் - தலைவர்கள் வாழ்த்து!

Radheyan 03 Oct 2023 | 11:44 PM
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாம்பரம் மாநகராட்சி கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநகர துணை அமைப்பாளராக சென்னை பதுவஞ்சேரியைச் சேர்ந்த திரு.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வீர்பாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பொளராக பணியாற்றி வரும் திரு.இளங்கோவன், விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். எனினும் இவரது தந்தையார் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பணியாற்றி வந்தபடியால், குழந்தைப்பரும் முதலே பழனியிலும், பின்னர் தொழில் நிமித்தமாக சென்னைக்கு குடியேறி வண்டலூர் அருகேயுள்ள பதுவஞ்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பாரம்பரிய திராவிட இயக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான திரு.இளங்கோவன், சிறுவயது முதலே திமுக வில் இருந்து வருகிறார். தற்போது மரத்தூள் விற்பனையில் ஈடுபட்டு வரும் இளங்கோவனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றுள்ள இளங்கோவனுக்கு, மாநகர துணை அமைப்பாளர் பதவிக்கு பரிந்துரை செய்து, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளார்.

மாநகர துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள இளங்கோவனுக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரராஜன், தங்கம், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Elangovan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண