தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் தங்கம் வென்ற சிறுவன் சூர்ய பிராகஷ் க்கு வாழ்த்து!

சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் தங்கம் வென்ற சிறுவன் சூர்ய பிராகஷ் க்கு வாழ்த்து!

Radheyan 13 Apr 2023 | 01:20 AM
பகிர்:

அகில இந்திய அளவில் நடைபெற்ற சர்வேத ஒலிம்பியாட் தேர்வில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் மகன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுகுறித்து விவரம் பின்வருமாறு,

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.செண்பகராஜ். இவர் சென்னை குரோம்பேட்டையிலுள்ள புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் மானேஜராக இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் எஸ்.சூர்யபிரகாஷ், குரோம்பேட்டையிலுள்ள புனித மார்க்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். 

மாணவன் எஸ்.சூர்யபிரகாஷ் கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் கலந்து கொண்டார். (ஒலிம்பியாட் தேர்வு என்பது உலகம் முழுவதும் ஒரே கல்வி மட்டத்திலுள்ள மாணவர்களுக்கிடையே தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு). இத்தேர்வில் எஸ்.சூர்யபிரகாஷ் சர்வதேச அளவில் 2695 வது ரேங்கும், இந்திய அளவில் 2031 வது ரேங்கும், மண்டல அளவில் 1045 வது ரேங்கும், பள்ளி அளவில் 3 வது இடமும், வகுப்பில் முதலிடமும் பெற்று தேர்வாகி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.   

தங்கப்பதக்கம் வென்ற சூர்யப்பிரகாஷ் க்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Olympiad thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண