தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
மத்திய அரசு விருதுவென்ற தலைவருக்கு பாராட்டுவிழா!

மத்திய அரசு விருதுவென்ற தலைவருக்கு பாராட்டுவிழா!

Radheyan 09 Apr 2023 | 06:00 PM
பகிர்:

மத்திய அரசு விருது வென்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் சமுதாய தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதுகுறித்து நாமக்கல் அறக்கட்டளை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மகாத்மா காந்தி தேசிய  ஊரகவேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும், கொரானா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் தாமரைச்செல்வனுக்கு மத்திய அரசின் சார்பில் சிறந்த ஊராட்சி  விருதுபெற்ற  திருச்செங்கோடு அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு தாமரைச்செல்வன் அவர்களுக்கு நேற்று முன்தினம் (07.04.2023, சனிக்கிழமை) மாலை, நாமக்கல்  தொட்டிய நாயக்கர்  சமுதாய அறக்கட்டளை அலுவலகத்தில்  பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சி மூத்த வழக்கறிஞர் B.பழனிசாமி தலைமையில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. அறக்கட்டளை அமைப்புச்செயலாளர் மு.சரவணன், திருச்செங்கோடு ரங்கசாமி, பிரபு, நாகராஜ், முருகேசன், பெ.தொட்டிபட்டி மனோகரன், சாமிநகர் தங்கவேல், தண்டுவாடம்பட்டி தங்கவேல், து.பாலப்பட்டி சின்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினர். இறுதியாக விருது பெற்ற தாமரைச்செல்வன் ஏற்புரையாற்றினார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thamaraiselvan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண