தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • படகுகளின் பாதையில் பயணித்த சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயின் பொற்காலம்! • சுகப்பிரியா குழும இல்லத் திருமணம் – சமுதாயத் தலைவர்கள் நேரில் வாழ்த்து! • மாதா ஹரி: உண்மையான உளவாளியா? Honey Trap மர்மத்தின் வரலாறு • சத்தியவதியின் முடிவுகள்: குரு வம்சத்தைக் காப்பாற்றியதா? பேரழிவுக்கு அடித்தளமிட்டதா? • DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • படகுகளின் பாதையில் பயணித்த சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயின் பொற்காலம்! • சுகப்பிரியா குழும இல்லத் திருமணம் – சமுதாயத் தலைவர்கள் நேரில் வாழ்த்து! • மாதா ஹரி: உண்மையான உளவாளியா? Honey Trap மர்மத்தின் வரலாறு • சத்தியவதியின் முடிவுகள்: குரு வம்சத்தைக் காப்பாற்றியதா? பேரழிவுக்கு அடித்தளமிட்டதா?
விளம்பரங்கள்
உங்கள் காருக்கான நோ க்ளெய்ம் போனஸ் திரும்பப்பெற மறக்காதீங்க!

உங்கள் காருக்கான நோ க்ளெய்ம் போனஸ் திரும்பப்பெற மறக்காதீங்க!

Radheyan 07 Mar 2023 | 05:22 PM
பகிர்:

கார் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.

அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள்.

அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை.

மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது,உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும். எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த No claim bonus யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும். No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்தாரே அந்தக் காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம்.

அந்த No claim bonus ஐ புதிய வாகனம் எடுக்கும் போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

இது போன்ற தகவல்களை எந்தக் காப்பீட்டு நிறுவனமும் ஏஜென்டும் விளம்பரம் செய்வதில்லை.....

நமக்குத் தெரிவிப்பதுமில்லை....

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு no claim bonus thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண