தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கம்பளத்தார் சார்பில் வரவேற்பு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கம்பளத்தார் சார்பில் வரவேற்பு!

Radheyan 22 Feb 2023 | 04:41 PM
பகிர்:

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நாளை வரவேற்பு!


வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளராக இருப்பவர் B.யுத்தீஸ்வரன். இவரது தந்தையார் மறைந்த பால்ராஜ் நாயக்கர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் அவர்களின் நெருங்கிய நண்பராகவும், திருவள்ளூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தவர். தற்போது யுத்தீஸ்வரன் திருவள்ளூர் தெற்கு மாவட்ட த.மா.க. வர்த்தக பிரிவு மாவட்ட தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், அந்தோணி நகரில் புதிதாக கட்டியுள்ள புதுமனைப்புகுவிழா வரும் வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் நாளை மாலை 3.30 மணியளவில் நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் யுத்தீஸ்வரன் இல்லத்திற்கு வருகைதரவுள்ளார். அதுசமயம் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஐயா.ஜி.கே.வாசன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சமுதாய நலச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நமது சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் யுத்தீஸ்வரன் மாண்பையும், கௌரவத்தையும் அவர் சார்ந்த கட்சியில் உயர்த்திடும் வகையில், கம்பளத்தார் இல்ல புதுமனைப்புகுவிழாவிற்கு வருகைதரும் தமாக தலைவர் ஜி.கே.வாசன் எம்பி அவர்களுக்கு சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளு வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு G.K.VASAN Thotianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண