தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அமைச்சர்களுடன் நாமக்கல் மாவட்ட இராஜகம்பளத்தார் சந்திப்பு!

அமைச்சர்களுடன் நாமக்கல் மாவட்ட இராஜகம்பளத்தார் சந்திப்பு!

Radheyan 16 Feb 2023 | 04:03 PM
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக அமைச்சர்களை நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள் சந்தித்துப்பேசியுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும்விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்த மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டர். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்ததாகவும், அதற்கு தேர்தல் முடிந்து சென்னை வந்து தன்னை சந்திக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.


இதன்பிறகு நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்துப்பேசினர். அமைச்சர்களுடனான இந்த சந்திப்பின்போது நாமக்கல் மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி, அறக்கட்டளை பொருளாளர் சின்னுசாமி, அமைப்புச்செயலாளர் திருச்செங்கோடு சரவணன், அனிமூர் ஊ.ம.தலைவர் தாமரைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் இந்திராணி மயில்சாமி, தமிழ், நாகராஜ், பாலப்பட்டி சின்னுசாமி, நாமக்கல் தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு KKSSR thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண