தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
ஞாயிற்றுக்கிழமை முப்பெரும்விழா! செய்தியாளர்களுக்கு அழைப்பு!

ஞாயிற்றுக்கிழமை முப்பெரும்விழா! செய்தியாளர்களுக்கு அழைப்பு!

Radheyan 26 Jan 2023 | 01:00 AM
பகிர்:

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முப்பெரும்விழாவை செய்தி சேகரிக்க வருமாறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

வணக்கம். இப்பவும் வீரபாண்டிய கட்டபொம்மன் நலச்சங்கம் சார்பில்  ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி-29)  மாலை 3 மணி முதல் 8 மணி வரை மாவீரன் கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு, மலர் வெளியீடு மற்றும் கட்டபொம்மன் அகாடமி திறப்பு ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து முப்பெரும்விழாவாக சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் திரளும் இந்த முப்பெரும்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், துணைமேயர், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

ஆகவே, இந்நிகழ்வை ஊடகங்களில் பதிவு செய்வதற்காக செய்தியாளர்களையும், புகைப்பட கலைஞர்களையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு தமிழ் செய்திகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண