தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
வீரசக்கதேவி ஆலயத்திற்கு விருது வழங்கி பாராட்டினார் அமைச்சர்!

வீரசக்கதேவி ஆலயத்திற்கு விருது வழங்கி பாராட்டினார் அமைச்சர்!

Radheyan 13 Jan 2023 | 02:42 AM
பகிர்:

எழுத்தாளர் இராஜ தமிழ்மாறன் எழுதிய தமிழன் வழிபாடு என்ற ஆய்வு நூல் வெளியீட்டுவிழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர், மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் எழுத்தாளர்கள், தமிழரிஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர்.



இவ்விழாவில் தமிழகத்தில் வரலாற்றில் இடம் பிடித்த 12 கோவில்களில் ஒன்றாக வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமான பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீர சக்கதேவி ஆலயத்திற்கு பாரம்பரிய வழிபாட்டுக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலயக்கமிட்டித் தலைவர் முருகபூபதியிடம் வழங்கினார்.



மேலும், இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கனிமொழி, கலாநிதி வீராசாமி, இராஜீவ்காந்தி, திருமாவேலன், அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Veerasakkadevi temple thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண