தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
பண்பாட்டுக்கழக அறக்கட்டளை விழாவில் திருச்சி.சிவா சிறப்புரை!

பண்பாட்டுக்கழக அறக்கட்டளை விழாவில் திருச்சி.சிவா சிறப்புரை!

Radheyan 31 Dec 2022 | 10:22 PM
பகிர்:

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பாக மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாள் பெறுவிழா வரும் 2.01.2023 திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது.


பண்பாட்டுக்கழகத்தின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி.சிவா எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்கான அழைப்பிதழை நேற்று (30.12.2022) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் நாமக்கல் நளா ஹோட்டலில் தங்கியிருந்த திருச்சி.சிவாவையும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களையும் சந்தித்து தமிழ்நாடு வீரபாண்டியகட்டபொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர். 


இந்நிகழ்வில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்ததாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kattabomman thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண