தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
75-வது சுதந்திரதினத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகளை வணங்குகிறோம்.

75-வது சுதந்திரதினத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகளை வணங்குகிறோம்.

Radheyan 15 Aug 2022 | 01:53 AM
பகிர்:

இந்தியாவின்  75 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அமுதப் பெருவிழாவாக கொண்டப்பட்டு வருகிறது.  இந்தாண்டு  நமது நாட்டின் 75வது சுதந்திரதின விழாவை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மக்கள் அனைவரும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து வீடு, கடைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்கள் என அனைத்திலும் 3 நாட்கள்  மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரியிருந்தார். அதன்படி பொதுமக்கள் கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதையொட்டி, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். இதேபோல், சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்ற உள்ளனர். 

75-வது சுந்திர தினத்தைக்கொண்டாடும் இவ்வேளையில் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரசமர் புரிந்து இன்னுயிர் துறந்த கம்பளத்தார் சமுதாய மாவீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி எத்திலப்ப நாயக்கர், ஊமைத்துரை உள்ளிட்டோரின் தியாகத்தை போற்றி வணங்குகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு 75th independence day thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண