தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
தமிழக முதல்வருக்கு கொரோனா-பூரணநலம்பெற வாழ்த்துகிறோம்!

தமிழக முதல்வருக்கு கொரோனா-பூரணநலம்பெற வாழ்த்துகிறோம்!

Radheyan 13 Jul 2022 | 12:54 AM
பகிர்:

 2021-சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஒராண்டுகாலமாக தினம்தோறும் ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஓயாமல் மக்கள் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை  தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நேரடியாக சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவிட்டு சென்னை திரும்பினார்.

மீண்டும் 14,15 ஆம் தேதிகளில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் இன்று உடற்சோர்வு சற்று இருந்தது.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரணநலம் பெற்று மக்கள் பணியாற்றிட வேண்டுமாய் இராஜகம்பளத்தார் சமுதாய மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு M.K.Stalin thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண