தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை?
விளம்பரங்கள்
பாஜக விவசாய அணி தலைவராக இராஜகம்பளத்தார் நியமனம்! தலைவர்கள் வாழ்த்து.

பாஜக விவசாய அணி தலைவராக இராஜகம்பளத்தார் நியமனம்! தலைவர்கள் வாழ்த்து.

Radheyan 12 Jun 2022 | 02:46 AM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக கடந்த ஆண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு ஓராண்டை நெருங்கும் வேளையில், மாநில அளவில் உள்ள பல்வேறு அணிகளுக்கான பொறுப்பாளர்கள் கடந்த  மாதகாலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளில் தலைவர் பதவியே அதிகாரமிக்கது. தலைவர் பதவியைத் தவிர பொதுச்செயலாளர், செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், துணைச் செயலாளர், துணைத்தலைவர் போன்ற பதவிகளில் நான்கு முதல் பதினாறுபேர் வரை நியமிக்கப்படுகின்றனர். மாநில அளவில் மட்டுமல்லாமல் எல்லா மட்டத்திலும், எல்லா அணிகளிலும் இதேபோல் நிர்வாக பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அனைத்து சமுதாயத்தினரையும் அரசியல் மையப்படுத்தும் வாய்ப்பை  பாஜக உருவாக்கிக்கொடுக்கிறது.


புதிய நிர்வாகிகள் நியமனத்தின் தொடர்ச்சியாக, பாஜக விவசாய அணியின் கோவை தெற்கு மாவட்ட விவசாய அணித்தலைவராக பொள்ளாச்சியைச் சேர்ந்த G.தர்மப்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக விவசாய அணியின் மாநிலத் தலைவர் G.K.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தர்மப்பிரகாஷை விவசாய அணியின் தலைவராக நியமனம் செய்துள்ளார்.

இதுவரை கோயமுத்தூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த தர்மப்பிரகாஷ் தீவிர ஸுவயம் சேவா உறுப்பினர். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தீவிரமாக பணியாற்றி மாநில, மாவட்டத் தலைமையின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர். பாஜகவில் பலமிக்க மாவட்டத்தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருவதாக சொல்லப்பட்டு வந்தநிலையில், தன்னுடைய தீவிரமான கட்சிப்பணியால் கொங்கு மண்டலத்தில் நிலவும் சாதிக்கணக்குகளையெல்லாம் வென்று தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளார்.

தர்மப்பிரகாஷ் அவர்களை இப்பதவியில் நியமித்த மாநில விவசாய அணித்தலைவர் நாகராஜ் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாவட்டத் தலைவர் வசந்தராஜன் அவர்களுக்கும், மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், பிற மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோயமுத்தூர் தொற்கு மாவட்ட விவசாய அணியின் மாவட்டத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தர்மப்பிரகாஷ் அவர்களுக்கு சென்னை, வீ,க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dharmaprakash thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண