தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
பாஜக பொதுச்செயலாளராக கம்பளத்தார் நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்.

பாஜக பொதுச்செயலாளராக கம்பளத்தார் நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்.

Radheyan 05 Jun 2022 | 01:23 AM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, தற்பொழுது கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி பாஜக-வின் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் T.ரகுநாதன் அவர்கள் நியமிக்கபட்டு உள்ளார்.

ஏற்கனவே விவசாயப்பிரிவு மாநிலச் செயலாளராக கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த இராஜேஷ் குருசாமி, வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவராக சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ராம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்பொழுது ரகுநாதன் ஒன்றிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் எந்தக் கட்சியிலும் இல்லாத நிலையில் தற்பொழுது பாஜக வில் மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரகுநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, ரகுநந்தனை இப்பதவிக்கு பரிந்துரை செய்த கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு. வசந்த்ராஜன் அவர்களுக்கும், ஒன்றிய தலைவர் திரு.தியாகராஜன் அவர்களுக்கும், வாய்ப்பு வழங்கிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், இராஜ கம்பளத்தார் சமுதாய மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு raghunanthan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண