தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
பாஜக மாநில செயலாளராக கம்பளத்தார்!

பாஜக மாநில செயலாளராக கம்பளத்தார்!

Radheyan 26 May 2022 | 02:00 AM
பகிர்:

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில விவசாய அணியின் மாநில செயலாளராக நமது இராஜ கம்பள நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த திரு.ராஜேஷ் குருசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக-வின் தலைவராக அண்ணாமலை Ex.IPS நியமிக்கப்பட்ட பிறகு நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாஜக-விலுள்ள பல்வேறு  அணிகளுக்கான நிர்வாகிகள் மற்றும் தலைமைப் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. 

அதில் தமிழக பாஜகவின் மாநில விவசாய அணியின் தலைவராக கோவையைச் சேர்ந்த G.K.நாகராஜன் கடந்த சில வாரங்களுக்கு முன் நியமிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது மாநில விவசாய அணியின் நிர்வாகிகள் பட்டியலை விவசாய அணியின் மாநிலத் தலைவர் நாகராஜன் வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாய அணியின் மாநில துணைத்தலைவர்களாக 12 பேர்களையும், மாநில பொதுச் செயலாளர்களாக 4 பேரையும், மாநில செயலாளராக இராஜேஷ் குருசாமி உள்ளிட்ட பதினோறு பேரை நியமித்து ஒப்புதல் வழங்கியுள்ளார். 

மாநில செயலாளராக இராஜகம்பளத்தார் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ள மாநில விவசாய அணித்தலைவர் G.K.நாகராஜன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுக்கும் கட்சியின் பல்வேறு  பொறுப்பாளர்களுக்கும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

இப்புதிய பொறுப்பில் இராஜேஷ் குருசாமி (இவரை பற்றி முழுமையாக வாசிக்க) சிறப்பாக பணியாற்றி மேலும் உயர்ந்திட வாழ்த்துகிறோம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rajeshgurusamy thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண