தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு-அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுக! தமிழக அரசு

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு-அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுக! தமிழக அரசு

Radheyan 16 Feb 2022 | 01:07 AM
பகிர்:

வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதியரசர் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ரத்து செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும்,பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதியரசர் நாகேஷ்வரராவ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, M.N.ராவ்,திவேதி,வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தின்போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரவுள்ளது. அப்பொழுது தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயங்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகவுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூகநீதி கூட்டமைப்பு தமிழக அரசு வேண்டுமென்றே காலம் கடத்த வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுவதாகவும், ஒரு சாதிக்கு ஆதரவாக அப்பட்டமாக துணைபோவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு reservation thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண