தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
கோவை மாமன்ற வேட்பாளராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு! - ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு நன்றி.

கோவை மாமன்ற வேட்பாளராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு! - ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு நன்றி.

Radheyan 02 Feb 2022 | 04:50 PM
பகிர்:

கோவை மாநகராட்சி 91-வது வார்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.K.R. செல்வராஜ் அவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பினை அக்கட்சி வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரான திரு.செல்வராஜ் அவர்கள், பரம்பரை அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டு வரும் திரு.செல்வராஜ் அவர்கள், ஏற்கனவே குனியமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பேரூராட்சி துணைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தீவிர விசுவாசியான திரு.செல்வராஜ் அவர்களுக்கு கோவை மாநகராட்சி 91-வார்டில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கிய கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி திரு.க.பழனிச்சாமி, பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் திரு.எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் திரு.தாமோதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, வட்டக்கழக நிர்வாகிகளுக்கு கம்பளத்தாரின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் உதவி:

திரு.சிவசாமி, கோவை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Sivasamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண