தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
கோலாகலமாக துவங்கியது மாவீரனின் 263-வது பிறந்தநாள்!

கோலாகலமாக துவங்கியது மாவீரனின் 263-வது பிறந்தநாள்!

Radheyan 03 Jan 2022 | 04:11 PM
பகிர்:

இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சை வேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் இன்று காலை கோலாகலமாக துவங்கியது. 

மாவீரன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பல்வேறு அமைப்புகள் மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதேபோல் பல்வேறு கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள்,  சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், அமைப்பினர்,  சமுதாய தலைவர்கள் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

postgallery(254)


மதுரையில் மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு,  மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதவிர ஆர்.எம்.ஆர் பாசறை தலைவர் இராமமோகன் ராவ் மதுரை மற்றும் திண்டுக்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

இதுதவிர கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல்,  திருப்பூர், விருதுநகர்,  தூத்துக்குடி,  இராமநாதபுரம்,  திருச்சி, சேலம், சென்னை  உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கட்சித்தலைவர்கள்,  சமுதாய தலைவர்கள் மாவீரன் திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kattabomman Thottianaicker thottinaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண