தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
விளம்பரங்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட கம்பளத்தார்கள் மீது பாய்ந்தது வழக்கு!

நூற்றுக்கும் மேற்பட்ட கம்பளத்தார்கள் மீது பாய்ந்தது வழக்கு!

Radheyan 18 Oct 2021 | 04:20 PM
பகிர்:

பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது நினைவுநாள் தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை விடுதலைக்களம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இராசிபுரம் பேருந்து நிலையம், போடிநாயக்கன்பட்டி, நாமக்கல், பொம்மைக்குட்டைமேடு, திருச்செங்கோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருப்படம் அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்களும், அரசியல் கட்சித்தலைவர்களும், சமுதாய பிரமுகர்களும் அத்திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலைக்களம் கட்சினர் பல்வேறு இடங்களில் கொடியேற்றி மாவீரனுக்கு வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்திருந்த காரணத்தால், ஒவ்வொரு இடங்களில் கொடியேற்றிவிட்டு வேறுவேறு இடங்களுக்கு கட்சியின் நிறுவனத்தலைவர் பயணித்தபடியால், அவரை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அக்கட்சியினர் அணிவகுத்து சென்றனர். இதனால் நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையிலும், நாமக்கல் நகரிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண