தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!

பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!

Admin 26 Jun 2026 | 11:12 AM
பகிர்:

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி (Pasumpon Thiru Muthuramalinga Thevar Memorial College) முதல்வராக விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஜெ.சரவணக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சமுதாயத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் கட்டபொம்மன் நகரைப் பூர்வீகமாகக் கொண்ட முனைவர் ஜெ.சரவணக்குமார், திரு. ஜெயராமன் – திருமதி முத்து கோப்பம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், விருதுநகரில் உள்ள விருதுநகர் ஹிந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் விரிவுரையாளராக சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2008ஆம் ஆண்டு கமுதியில் உள்ள பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியில் இணைந்த அவர், தொடர்ந்து ஆங்கிலத் துறைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

தென் தமிழகத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரி, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் அவர்களின் நினைவாக 1970ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. கல்வி வசதிகள் குறைவாக இருந்த இராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு உதவிபெறும் கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறந்த உட்கட்டமைப்பு, வளமான நூலக வசதி மற்றும் நவீன விடுதி வசதிகளும் இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாகும்.

சுமார் 18 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய முனைவர் ஜெ.சரவணக்குமார் அண்மையில் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 1-ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முனைவர் ஜெ.சரவணக்குமார் மனைவி திருமதி எஸ்.சித்ராதேவி (M.Com.) ஆவார். இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பில் பயிலும் எஸ்.நிதீஷ்குமார் என்ற மகன் உள்ளார்.

முனைவர் ஜெ.சரவணக்குமார் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதையொட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வை.மலைராஜன் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dr.j.saravanakumar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண