Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
எலக்ட்ரிக் கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் பொருங்க...

எலக்ட்ரிக் கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் பொருங்க...

Radheyan 08 Jul 2025 | 05:07 PM
பகிர்:

நவீன வாகன உற்பத்தியில் மின்சார வாகனங்களின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது. சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது புதிய பதிவு எண் வாகனங்களில் பாதிக்கு மேற்பட்டவை மின்சார வாகனங்களாக இருப்பதைப்பார்க்கிறோம்.  

 பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை விட குறைவான மாசு. அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் வரிக் குறைப்பு போன்றவற்றால் போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறைவது போன்ற காரணங்களால் இனி எதிர்காலம் மின்சார வாகனம் தான் என்று நினைக்கும்வேளையில், சற்றுப்பொறுங்கள் என்கிறது பிரபல கார் தயாறிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ  (BMW) நிறுவனம்.

மின்சார வாகனங்களுக்கு மாற்றாக இந்நிறுவனத்திடமுள்ள திட்டம் தான் என்ன?  

ஹைட்ரஜன்!.. 

ஆம் BMW நிறுவனம் நம்புவது ஹைட்ரஜனைத்தான்.

எதிர்கால எரிபொருளாக ஹைட்ரஜனை (Hydrogen) நம்புகிறது BMW நிறுவனம். ஹைட்ரஜன் எரிபொருள் ஆராய்ச்சி மின்சாரக் கார்களுக்கு அப்பால் சென்றுவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 


ஹைட்ரஜன் எஞ்சின்களின் முக்கியமான வரம்புகளான –  மைலேஜ் பற்றிய கவலை (Range Anxiety), எரிபொருள் நிரப்பும் நேரம் மற்றும் குளிர் காலச் செயல்திறன் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிட்டதாக இந்நிறுவனம் கூறிகிறது. 

ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைக் (Hydrogen Fuel Cells) கொண்டு, சில நிமிடங்களிலேயே எரிபொருள் நிரப்ப முடியும். மேலும், பெட்ரோல் கார்களைப் போலவே ஓட்டும் வரம்பையும் (Driving Range) வழங்குவதால், அவை ஒரு கவர்ச்சிகரமான இப்போது இருக்கும் இயந்திரங்களிற்கு மாற்றாக அமையம் எனவும் நம்புகிறது .

பல வாகன உற்பத்தியாளர்கள் பேட்டரி மின்சார வாகனங்களில் (Battery Eelectric Vehicles) மட்டுமே கவனம் செலுத்தும் வேளையில், BMW ஹைட்ரஜன் ஒரு தூய்மையான மற்றும் நீண்டகாலத்திற்குப் பயனுள்ள தீர்வை வழங்கும் என்று நம்புகிறது. குறிப்பாக மின்சார வாகன உள்கட்டமைப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு இது மிகவும் பொருந்தும். BMW-இன் இந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற்றால், நிலையான போக்குவரத்துக்கான (Sustainable Mobility) வாகனத்துறையின் திட்ட வரைபடத்தையே (Road Map) மாற்றியமைக்கக்கூடும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு EV thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண