தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
நம்பிக்கை தரும் கட்டபொம்மன் அகாடமி மாணவர்கள்!

நம்பிக்கை தரும் கட்டபொம்மன் அகாடமி மாணவர்கள்!

Radheyan 23 Apr 2023 | 12:39 AM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமி மற்றும் மேத்தா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தி வரும் குரூப் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 11 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஒன்னறை மாதங்களாக பயிற்சி பெற்று வரும் இம்மாணவர்களுக்கு கடந்த வாரம் முதல் வகுப்புத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கம்பளத்தார் சமுதாய மாணவ - மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று வகுப்பில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் பயிற்சி வகுப்பிற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பாசிரியர்கள் கம்பளத்தார் சமுதாய மாணவர்கள் ஆர்வத்தோடும், அக்கரையோடும் படிப்பதாகவும், நிச்சயம் தேர்வில் வெற்றிபெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இறுதியில், பதினோரு மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணத்திற்கான காசோலையை மேத்தா ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனரிடம் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது சங்கத்தின் துணைத்தலைவர் பெருமாள் உடனிருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kattabomman Acadamy thottianaicker. www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண