தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு துணைத்தலைவருடன் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

ஒன்றியக்குழு துணைத்தலைவருடன் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

Radheyan 24 Mar 2023 | 04:32 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியக்குழு துணைத்தலைவர் நேற்று கட்சி அலுவல் சம்மந்தமாக தலைநகர் சென்னை வருகை தந்தார். அவருக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சுழி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் திமுக துணை அமைப்புகளுக்கான தேர்தலில் முக்கியப்பொறுப்புக்கு விருப்பமனு அளித்திருந்த மூக்கையா விழா நடைபெற்ற தினத்தன்று திடீரென நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதனால் மூக்கையன் அவர்களால் முப்பெரும்விழாவில் கலந்து முடியாத சுழல் ஏற்பட்டதில் மிகுந்த வருத்தம் கொண்டிருந்தார்.


இதற்கிடையே நேற்று கட்சி அலுவல் சம்மந்தமாக சென்னை வந்திருந்த மூக்கையன் அவர்கள் செங்குன்றத்திலுள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டபொம்மன் அகாடமியை பார்வையிட விருப்பம் தெரிவித்திருந்தார். சங்கத்திற்கு வருகைதரவுள்ள ஒன்றியக்குழு துணைத்தலைவரை வரவேற்க நிர்வாகிகள் காத்திருந்தநிலையில், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை சந்திப்பதில் ஏற்பட்ட நீண்ட காலதாமதம் காரணமாக சங்க தலைமையகத்திற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை தமிழக தொழில்துறை அமைச்சரின் இல்லத்தில் துணைத்தலைவர் மூக்கையன் அவர்களை பொருளாளர் எஸ்.இராமராஜ் தலைமையிலான சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்துப்பேசினர். அப்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் முப்பெரும்விழாவிற்காக திரட்டப்பட்ட இரண்டாம் தவணை நிதியை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். இச்சந்திப்பின்போது சங்கதுணைத்தலைவர் பெருமாள், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mookaiain thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண