தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
கட்டபொம்மன் அகாடமி இரண்டாம் சுற்றில் தேர்வானவர்கள் விவரம்!

கட்டபொம்மன் அகாடமி இரண்டாம் சுற்றில் தேர்வானவர்கள் விவரம்!

Radheyan 08 Feb 2023 | 04:53 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் அங்கமான வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.


சென்னை, அண்ணாநகரில் இயங்கிவரும் மேத்தா ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ-மாணவியருக்கு குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமியில் சேர்ந்து பயில கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனடிப்படையில் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சாதி சான்றிதழ் சரிபார்ப்பிற்குபின் முப்பது மாணவ-மாணவியர் இரண்டாம் சுற்று தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த 30 நபர்கள் இரண்டாம் சுற்று காணொளி நேர்காணலுக்கு ஜனவரி மூன்றாவது வாரம் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் நான்கு பேர் மட்டுமே கலந்துகொண்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நேர்காணல் கடந்த 4.02.2023 அன்று நடைபெற்றது. இதில் 24 பேர் கலந்துகொண்டு, தேர்வாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இரண்டாம் சுற்றின் முடிவில் 14 நபர்களை தேர்வு செய்து தேர்வாளர்களான திரு.மு.பழனிச்சாமி மற்றும் திரு.பெ.இராமராஜ் ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர். சாதி,கல்வித்தகுதி, மாணவர் காட்டிய ஆர்வம், பொருளாதார பின்புலம், வயது, அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள மாணவ-மாணவியர் விபரம் பின்வருமாறு,

1.பழனிவேலு. B.E.,(Metulurgy)

2.ஜீவரத்னா. B.E.,(CSE)

3.கனகா.B.E., (Civil)

4.அரவிந்த்குமார். B.E., (Mech)

5.பூபதிராஜா.B.Com.,

6.தேவி சித்ரா.B.E., (CSE)

7.திவ்யா. B.Sc., (Maths)

8.செல்வகணேஷ். B.Com.,

9.கோபாலகிருஷ்ணன். B.E.,(Mech)

10.இன்பராஜ்.M.Com.,B.Ed.,

11.சுகன்யா.B.Com CA.,

12.சுவாதி.M.A.,B.Ed.,

13.இளையராஜா.B.C.A.,

14.விஜயகுமார். B.Sc., (Chemistry)


வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி தேர்வுக்குழுவினரால் இரண்டாம் சுற்றில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மேத்தா ஐஏஎஸ் அகாடமி சார்பில் இறுதி சுற்று தேர்வு நடத்தப்பட்டு, குரூப் தேர்வுகளில் வெற்றிபெற வாய்ப்புள்ள மாணவர்களை அடையாளங்கண்டு, வரிசைப்படுத்தி இறுதிப்படியலை வரும் 11.02.2023-க்குள் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகத்திடம் வழங்கும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kattabomman acadamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண