தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
முப்பெரும்விழா வெற்றிபெற  நல்லாசிரியர் சங்கரவேலு வாழ்த்து!

முப்பெரும்விழா வெற்றிபெற நல்லாசிரியர் சங்கரவேலு வாழ்த்து!

Radheyan 20 Jan 2023 | 02:49 AM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழ் த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தின் கௌரவத்தலைவரும், சமுதாயத்தின் மூத்த தலைவருமான நல்லாசிரியர் திரு.சங்கரவேலு அவர்களிடம் சங்கத்தின் பொருளாளர் நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய நல்லாசிரியர் முப்பெரும் விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தியதோடு, டிஎன்டி, இடஒதுக்கீடு உள்ளிட்ட  பிரச்சினைகளில் சங்கத்தின் செயல்பாட்டினை பாராட்டினார்.


முன்னதாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊர் சென்றிருந்த சங்கத்தின் பொருளாளர் எஸ்.ராமராஜு, நன்கொடையாளர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து முப்பெரும்விழாவிற்கு அழைப்பு விடுத்தார். எல்லோரையும் சந்தித்து நேரடியாக அழைக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தாலும், நடைமுறை சாத்தியமில்லாத காரணத்தாலும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் கொடுப்பதற்காக மட்டுமே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட காரணத்தாலும் ஒருசிலருக்கு மட்டுமே அழைப்பிதழ் நேரடியாகவும், தபால் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. 

சமூக வலைதளங்கள் மூலமே பெரும்பான்மையினருக்கு அழைப்பிதழ் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆகையால் நேரடியாக அழைப்பிதழ் வரவில்லை என்று யாரும் எண்ணத்தேவையில்லை. முப்பெரும் விழா நமது குடும்பவிழா, நம்வீட்டு விஷேசம் என்ற அடிப்படையில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல் உதவி: எஸ்.இராமராஜு , பொருளாளர்


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Sankaravelu thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண