சென்னை, வீரபாண்டி கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரும் ஜனவரி 29 ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சரை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு அவர்களை சந்தித்து சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அழைப்புவிடுத்தார்.

இந்த சந்திப்பின் போது நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, மு.சரவணன் ஆகியோருடன் இராஜகம்பள சமுதாயத்தின் பொதுச்செயலாளர் R.சொந்தில் குமார், பொருளாளர் S.ராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.