தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
குளத்துப்பாளையத்தில் குவிந்த சமுதாய மக்கள்.

குளத்துப்பாளையத்தில் குவிந்த சமுதாய மக்கள்.

Radheyan 25 Nov 2022 | 06:12 PM
பகிர்:

கோவை வடக்கு மாவட்ட இராஜகம்பள சமுதாயம் நல சங்கத்தின் குளத்துப்பாளையம் கிளை துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு குளத்துப்பாளையம் ஊர் நாயக்கரும், வடக்கு மாவட்ட தலைவருமான கே.ஜெயபால், ஊர் சின்ன நாயக்கர் மாரைய நாயக்கர் ஆகியோர் தலைமைவகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக ஈச்சனாரி ஊர் நாயக்கர் என் ராஜகோபால்,  மாச்சநாயக்கன் பாளையம் ஊர் நாயக்கர் எம்.பிரபு,  ஆறுமுக கவுண்டர் ஊர் நாயக்கர் ஆர். நாராயணசாமி,  பச்சாபாளையம் ஊர் நாயக்கர் ஆர் சவிஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ்,  இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார், மகளிர் அணி அமைப்பாளர் என். பாக்கியலட்சுமி,  கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எ. கணேசன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ். சண்முககுமார், தங்கவேல்,  செய்தி தொடர்பாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி. அரவிந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட தலைவர் டி. குணசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.வெங்கடேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 கவிஞர் முகுந்தன், கம்பளத்தார் சமுதாயத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களை நீக்கி, முன்னேற்பாதையில்பயணிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசிய  பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், முப்பெரும் விழா நடத்துவதற்கான காரணங்களை பட்டியலிட்டதோடு,  இதன் மூலம் அரசியல் கவனத்தை ஈர்ப்பது அவசியம் என்றார். மேலும், நமது சமுதாயம் கல்வி, வேலை, அரசியல் என எல்லா துறைகளிலும் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இதை ஒருங்கிணைந்து முறியடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இறுதியாக மகளிர் அணி தலைவி அமுதா நன்றியுரையாற்றினார். 

இக்கூட்டத்திற்கு கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளைகளில் இருந்தும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், துணை செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குளத்துப்பாளையம் மகளிர் அணி திரளாக கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் திரு.கே.ஆர்.வரதமணி, மகளிர் அணி துணை அமைப்பாளர் திரு.கே.ஆர்.டி.லட்சுமி தேவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரு.வி.ராஜசேகர், சுப்பிரமணி கிளைச் செயலாளர் கே.ஆர்.டி.குமார், கிளை இளைஞரணி செயலாளர் மணிவண்ணன், சக்தி குமார்  ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து இருந்தனர்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண