தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கோவையில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க மகளிரணி தொடக்கவிழா!

கோவையில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க மகளிரணி தொடக்கவிழா!

Radheyan 15 Aug 2022 | 12:43 AM
பகிர்:

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தொடக்கவிழா கடந்த 31.07.2022, ஞாயிற்றுக்கிழமை ஈச்சனாரியிலுள்ள விவேகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விடுபட்ட பகுதிகளிலும் அமைப்புகள் தொடங்கும் பணியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈச்சனாரி சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மகளிரும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தில் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். மகளிர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஈச்சனாரியில் இன்று மகளிர் அணி தொடக்க விழா நடைபெற்றது. ஊர் நாயக்கர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஈச்சனாரி மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மகளிரணி தலைவியாக திருமதி.பாக்கியலட்சுமி, துணைத் தலைவராக திருமதி எஸ்.மணிமேகலை, செயலாளராக திருமதி ஆர். சத்தியபாமா, பொருளாளராக திருமதி பி.லலிதாம்பிகை, துணைச்செயலாளர்களாக திருமதி.கலைச்செல்வி, திருமதி.சுவாதி, திருமதி எஸ்.ரம்யா, ஆலோசர்களாக திருமதி நஞ்சாத்தாள், திருமதி ஜெயலட்சுமி, திருமதி ரத்னா, திருமதி சிவனேஸ்வரி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை சென்னையிலிருந்து பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் தொலைபேசி வாயிலாக வாழ்த்திப்பேசினார். மாவட்ட  இணை ஒருங்கிணைப்பாளர் ஈச்சனாரி சிவக்குமார் விழாவில் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai kambalathar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண