பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தொழில் பிரிவின் துணைத்தலைவராக திரு.ப.விஜயகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 2005-ல் இளங்கலை பட்டம் பெற்று வங்கிப்பணிகளில் ஆறு வருடம் பணியாற்றிய பின் 2010-முதல் சுயதொழில் செய்துவருகிறார். 2018-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த ப.விஜயகுமார், ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைத்தலைவராகவும், தொழில்பிரிவு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவந்தவர். தற்பொழுது வெளியாகியுள்ள புதிய நிர்வாகிகளின் பட்டியல்படி தொழில்பிரிவில் மாவட்ட துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திரு.ப.விஜயகுமார் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாவட்டத் தலைவர், ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.