தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை?
விளம்பரங்கள்
மக்கள் பணியில் தமிழரசி! மகுடம் சூட்டிய தராசு!

மக்கள் பணியில் தமிழரசி! மகுடம் சூட்டிய தராசு!

Radheyan 08 Jun 2022 | 04:26 PM
பகிர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திருமதி.தமிழரசி தனக்கோடி. 2019-இல் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். மக்கள் நலத்திட்டப்பணிகளை தனது ஊராட்சிக்குப் பெற்றுத்தருவதிலும், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்வதிலும் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார். 

கடந்த இரண்டாண்டுகளில் கொரோனா தடுப்புப்பணி, 100 சதவீத கொரோனா தடுப்பூசி, மகாத்மா காந்தி  தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை, ஃபேவர்பிளாக்சாலை ,தேரப்பாடி முதல் கொக்கட்டிபட்டி  செல்லும் பழுதான தார் சாலைக்கு பதிலாக புதிய தார் சாலை, சமத்துவ மயானத்திற்க்கு செல்லும் வழியில் தரைமட்ட பாலம், மரக்கன்றுகள் நடவு, வேலைவாய்ப்பு முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி, புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி பைப்லைன் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்கியது என எண்ணற்ற பணிகளை செய்து முடித்ததோடு, தொடர்ந்து வளச்சித் திட்டங்களையும் மென்னெடுத்துவருகிறார். மேலும் ஊராட்சியின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் கிராமசபைக் கூட்டங்களில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு நகல்களை பொதுமக்களிடம் வழங்கி வருகிறார்.

திருமதி.தமிழரசி தனக்கோடி அவர்களின் மக்கள்பணிக்கு மணிமகுடம் சூட்டும் வகையில், தராசு மக்கள் இயக்கம் மற்றும் நடப்பு தராசு மாத இதழும் இணைந்து, சிறந்த ஊராட்சிமன்றத் தலைவருக்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி நடந்த விழா ஒன்றில் தராசு மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி தனக்கொடி அவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Tamilarasi Dhanakkodi thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண