தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
ஒன்றியச் செயலாளராக மீண்டும் தேர்வு! முன்னாள் முதல்வர் வாழ்த்து.

ஒன்றியச் செயலாளராக மீண்டும் தேர்வு! முன்னாள் முதல்வர் வாழ்த்து.

Radheyan 08 May 2022 | 12:53 AM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை தேர்வு செய்யும் உட்கட்சித்தேர்தல் ஏப்ரல்-19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ள இத்தேர்தலில் ஒருசில நிர்வாகிகள் தவிர்த்து பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்கனவே பதவி வகித்தவர்கள் தங்கள் பொறுப்புகளை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அந்த அடிப்படையில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக மீண்டும் கோ.கலையரசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒன்றியச்செயலாளர் பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ள கோ.கலையரசன் அவர்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே முன்னாள் முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களைச் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துப்பெற்றார் ஒன்றியச் செயலாளர் கோ.கலையரசன். முன்னாள் முதல்வருடனான இந்த சந்திப்பின்பொழுது கரூர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Kalaiarasan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண