தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சிலம்பாட்ட போட்டியில் தங்கபதக்கம் வென்ற கண்மணிகள்.

சிலம்பாட்ட போட்டியில் தங்கபதக்கம் வென்ற கண்மணிகள்.

Radheyan 09 Mar 2022 | 11:49 PM
பகிர்:

கோவாவில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தேனி மாவட்டத்திலுள்ள தீபம் அறக்கட்டளை சிலம்பம் பயிற்சி பள்ளியின் சார்பாக கலந்துகொண்ட ஒன்பது மாணவர்கள் சிறப்பாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களான M.ஸ்ரீமந்த் கிருஷ்ண S/o. திரு.மயில்சாமி & திருமதி.கணேஸ்வரி, P.அக்ஷயக்குமார் S/o. திரு.பரமசிவம் & திருமதி. ஜெயராணி, C.சுரேந்திரபாண்டியன் S/o. திரு.செல்லசாமி & திருமதி. மஹாலக்ஷ்மி ஆகியோர் சொந்த ஊரான தேனி மாவட்டம் சத்திரப்பட்டி திரும்பினர். அப்பொழுது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவச்செல்வங்களை ஊர்பொதுமக்கள் திரளாக ஒன்றுகூடி வானவேடிக்கைகள் முழங்க, மாலை அணிவித்து மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். வீரபாண்டி பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர். திருமதி.பிரசாந்தினி ஜெயச்சந்திரன் தங்கப்பதக்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கூறி பாராட்டினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண