தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
அமைச்சர் K.K.S.S.R தாயார் திருமதி.அமராவதி அம்மையார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

அமைச்சர் K.K.S.S.R தாயார் திருமதி.அமராவதி அம்மையார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

Radheyan 22 Dec 2023 | 04:08 PM
பகிர்:

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான மாண்புமிகு.கே. கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி.ஆர்.அமராவதி அம்மாள் அவர்கள் தனது 94 வயதில் அகவை முதிர்வால் இன்று (22.12.2023) அதிகாலை விருதுநகரிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அமைச்சரின் தாயார் மறைவுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் செயல் தலைவர் பெ.இராமராஜ், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்ட சமுதாயத்தலைவர்கள் தென்மாவட்ட அரசியலில் ஆளுமை மிக்க, அசைக்க முடியாத அரசியல் தலைவரை பெற்றெடுத்த அமராவதி அம்மையாரின் மறைவுக்கு வீரவணக்கம், தாயாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சருக்கும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.  

அதேபோல் வருதுநகர் வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி மாவட்ட அமைப்பாளர் வை.மலைராஜன், திருச்சுழி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மூக்கையன், தொழிலதிபர் மணிவாசகன், தொழிலதிபர் கிருஷ்ணன், ஈச்சனாரி மகாலிங்கம், அரவக்குறிச்சி ஒன்றியப் பெருந்தலைவர் ஜெயந்தி மணிகண்டன் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திருமதி.அமராவதி அம்மையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு K.K.S.S.R thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண