தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
மு.அமைச்சரின் தந்தையார் மறைவுக்கு இராஜகம்பளத்தாரின் இரங்கல்.

மு.அமைச்சரின் தந்தையார் மறைவுக்கு இராஜகம்பளத்தாரின் இரங்கல்.

Radheyan 18 Apr 2023 | 04:13 PM
பகிர்:

பால்வளத்துறை முன்னாள் அமைச்சரும், அஇஅதிமுக கழக அமைப்புச்செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தையார் கே.தவசிலிங்க ஆச்சாரி அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (17.04.2023) மாலை காலமானார்.

முன்னாள் அமைச்சரின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜகம்பளத்தார் கோட்டையான விருதுநகரில் கம்பளத்தாருக்கு உரிய அரசியல் அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்வதற்கு முன்னுரிமையளிக்கும் கே.டி.இராஜேந்திரபாலாஜி அவர்கள், ஒன்றியச்செயலாளர், பல்வேறு துணை அமைப்புகளில் மாவட்ட அளவிலான பதவிகள், பால்வளத்துறையில் மாவட்ட துணைத்தலைவர் பதவி, நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என அனைத்து வகைகளிலும் கம்பளத்தாருக்கு உறுதுணையாக இருந்துவருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் மரியாதை அளித்திடக்கோரி  சென்னை, வீ.கபொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வைத்த கோரிக்கையை உடனடியாக தலைமையிடம் கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுத்தவர்  கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்கள் என்பதை இச்சமயத்தில் கம்பளத்தார் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைவுகொள்கிறோம். 

இப்படி எல்லா வகையிலும் கம்பளத்தாருக்கு உற்ற தோழனாக ஆதரவுக்கரம் நீட்டி வரும் முன்னாள் அமைச்சருக்கு, நல்ல தந்தையாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்த கே.தவசிலிங்க ஆச்சாரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து  மிகவும் வேதனையடைந்தோம். தந்தையை இழந்து சிறகொடிந்த பறைவைபோல் வாடும் முன்னாள் அமைச்சருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், கழக உடன் பிறப்புக்களுக்கும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பார பிரார்த்திக்கின்றோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு K.T.Rajendarabalaji thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண