தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை! • ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்: • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை! • ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்: • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!
விளம்பரங்கள்
இளம் வயதில் தாசில்தாரின் மறைவு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

இளம் வயதில் தாசில்தாரின் மறைவு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

Radheyan 29 Jun 2022 | 04:32 PM
பகிர்:

இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் வையப்பநாயக்கர் அவர்களின் மகள் வழிப்பெயரனும், முன்னாள் டி.எஸ்.பி.ஜெயராஜ் அவர்களின் மருமகனும், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகர் திரு.வெங்கடேஷ் அவர்களின் மைத்துனரும், கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியராக (தாசில்தார்) பணியாற்றி வந்தவருமான M.வேலுச்சாமி.M.A., (48) கடந்த 23.06.2022 (வியாழக்கிழமை) அன்று இரவு இயற்கை எய்தினார். 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவரான அமரர்.வேலுச்சாமி அவர்கள் குரூப்-II தேர்வில் வெற்றிபெற்று அரசுப்பணி நியமனம் பெற்றார். கடந்த சில வருடங்களாக கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு தேனியில் தங்கி சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மறைந்த வேலுச்சாமி அவர்களுக்கு V.சாந்தா என்ற மனைவியும், V.ஜெயபால் என்ற மகனும் உள்ளனர். ஜெயபால் கடந்த கல்வியாண்டில் சென்னை லயோலா கல்லூரியில் கணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்து, குரூப் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் சப்-கலெக்டராக பதவி உயர்வு பெறுவிருக்கும் நிலையில். வேலுச்சாமி அவர்கள் காலமானது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இவரது மூத்த சகோதரர் திரு.M.சந்திரசேகர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார், மற்றொரு சகோதரர் திரு.M.ராஜ்குமார், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும்,உற்றார் உறவினர்களுக்கும் சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Velusamy thottaianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண