தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
மாமனிதர் P.S.துரை மறைந்தார் - ஆழ்ந்த இரங்கல்

மாமனிதர் P.S.துரை மறைந்தார் - ஆழ்ந்த இரங்கல்

Radheyan 29 Jan 2022 | 07:07 PM
பகிர்:

இரங்கல் செய்தி!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பிளாட்டினம் கிளப் நன்கொடையாளரும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி PS ஆயில்மில் உரிமையாளரும், தொழிலதிபர்.P.S.மணி அவர்களின் சகோதரருமான திரு.P.S.துரை இன்று (29.01.2022) காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்ற உயரிய மனிதர். பழகுவதற்கு எளிய மனிதரான திரு.துரை அவர்கள் சங்க கட்டிட நன்கொடையாக ரூ.100000/- கொடுக்க வேண்டும் என்ற அவரது அண்ணன் P.S.மணி அவர்கள் சொல்லிய அடுத்த வினாடி ரூ.ஒரு லட்சத்தை ரொக்கமாக வழங்கியது அண்ணன் மீதான நம்பிக்கை, பற்று, சமுதாயத்தின் மீதான அக்கறை என அனைத்தையும் ஒருநொடித்துளிகளில் அறியச்செய்த மாமனிதர். பெயருக்கு ஏற்றாற்போல் இறுதி மூச்சு அடங்கும் வரை துரையாகவே வாழ்ந்து மறைந்துள்ளார். அவரின் மறைவுச்செய்தி சொல்லெனாத்துயரையும், வலியையும் ஏற்படுத்துகிறது. 

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்களுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு P.S.Durai Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண