தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
பெருந்தலைவர் சென்னையா நாயக்கர் இல்லத் திருமணவிழா!

பெருந்தலைவர் சென்னையா நாயக்கர் இல்லத் திருமணவிழா!

Radheyan 04 Nov 2025 | 12:00 AM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் தெய்வத்திரு.சென்னையா நாயக்கர் இல்லத்திருமணவிழா இன்று (03.11.2025) சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தலைவர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,

சென்னை-வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் தெய்வத்திரு. சென்னையா நாயக்கர் – திருமதி. குருவம்மாள் ஆகியோர் மகள் வழிப்பெயரனும், சங்க உறுப்பினரும், மேக்ஸ் பாலிமர்ஸ் உரிமையாளருமான திரு.என்.ஜெயராஜ் – திருமதி. விஜயா ஆகியோரின் மகன் ஜெ.மணிபாரதி -க்கும், கௌகாத்தி அகில இந்திய வானொலியின் உதவிப்பொறியாளர் வி.அருள் , தூர்தர்ஷன் துணை இயக்குநர் திருமதி. அமுதஜோதி ஆகியோரின் அன்பு மகள் வி.எ.ஸ்ரீ சாத்விகா ஆகியோரின் திருமணம் இன்று (03.11.2025) காலை வால்டேக்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜே.கே.கன்வென்ஷன்ஸ் ஹாலில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று (02.11.2025) மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், அமைப்புச் செயலாளர் சுந்தர்ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மண்டல பொறுப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, ராமவரம் சுப்பிரமணி, ஆண்டிமுருகன், ஆலோசகர்கள் மல்லையசாமி, கந்த சுப்புராஜ், முரளிகிருஷ்ணன், மாப்பிள்ளை துரை, கந்தசாமி குருக்கள், வடபெரும்பாக்கம் குமரேசன், காவல்துறை அதிகாரி சண்முகராஜ், போரூர் சண்முகராஜன் மற்றும் திரைப்பட நடிகர் சின்னா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்திற்கு வருகைபுரிந்தவர்களை மணமக்களின் பெற்றோர்கள் வரவேற்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு sennaiah naicker thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண