தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
வீரசக்கதேவி ஆலய சித்திரைத் திருவிழாவில் இளம் தலைவர் துரை வைகோ!

வீரசக்கதேவி ஆலய சித்திரைத் திருவிழாவில் இளம் தலைவர் துரை வைகோ!

Radheyan 27 Mar 2023 | 10:37 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமான பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 67-வது ஆண்டு சித்திரைத் திருவிழா வருகின்ற 12.05.2023 &13.05.2023 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கம்பளத்தார்களும் அன்னையின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கில் பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகைதந்து அம்மனை தரிசித்துச் செல்வது வாடிக்கை. ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதற்கு ஏற்ப, விழா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர் ஆலயக்குழுவினர்.


திருவிழாவிற்கு இன்னும் ஒருசில வாரங்களே உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கி வருகின்றனர் ஆலயக்குழுவினர். இதனொரு பகுதியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அவர்களை கலிங்கப்பட்டியிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினர். ஆலயக்குழுவினரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட துரை வைகோ முதல்நாளான 12.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு கலந்து கொள்வதாக தெரிவித்ததாக ஆலயக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயக்குழு தலைவர் மு. முருகபூபதி தலைமையில் சென்ற குழுவில் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Veerasakkadevi thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண