தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
முப்பெரும்விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது!

முப்பெரும்விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது!

Radheyan 07 Jan 2023 | 02:31 PM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைநகர் சென்னையில் கலைவாணர் அரங்கில் ஜனவரி-29' இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழ் வெளியீட்டு நிகச்சி நேற்று மாலை சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்றது.


சங்கத்தின் மூத்த ஆலோசகரும், இராஜகம்பள மஹாஜன சங்கம் மற்றும் த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தில் முக்கிய தலைமைப்பொறுப்பில் இருந்தவருமான ஆசிரியர் நல்லையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ழ்சியில், சங்கத்தின் முன்னாள் தலைவர் சென்னையா நாயக்கர் அவர்களின் துணைவியாரும், "ஆப்ரேசன் 864" குழுவின் தலைவராக பொறுப்பேற்று, ரூ.25,00,000/- (ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம்) மதிப்பிலான 5 சென்ட் காலி மனையை கடந்த மார்ச் மாதம் சங்கத்திற்காக கிரையம் செய்ய, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நிதிதிரட்டி சங்கத்தின் "நிலவங்கி"யை உயர்த்திட உதவியருமான குருவம்மாள் சென்னையா நாயக்கர் வெளியிட , சங்கத்தின் மூத்த ஆலோசகர்களில் ஒருவரும், சங்கத்திற்காக முதன்முதலில் நிலம் வாங்குவதற்காக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பெரும்தொகையாக ரூ.50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கிய ஈச்சனாரி ஊர்நாயக்கரும், தொழிலதிபருமான முத்துச்சாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.


முப்பெரும்விழா அழைப்பிதழ் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் சென்னையா நாயக்கர், தலைவர் இராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் இராமராஜு, துணைத் தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் முருகன், மண்டல பொறுப்பாளர்கள் குருசாமி, செல்வராஜ், சிவராமன்,எஸ்.எஸ்.செல்வராஜ், ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலைவாணர் அரங்கில் நடைபெரும் முப்பெரும்விழா நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. இதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு முன்பணமாக ரூ.300000/- (ரூ.மூன்று லட்சம் மட்டும்) வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதியை முத்துச்சாமி அவர்கள் அந்நிறுவன அதிகாரியிடம் வழங்கினார்.



குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முப்பெரும்விழா thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண